in

2019 யில் வெளியான டாப் 10 வசூல் சாதனை தமிழ் படங்கள்

ஒவ்வொரு வருடமும் போலவே இந்த வருடமும் மெகா ஹீரோக்களின் பெரிய பட்ஜட் படங்கள் தொடக்கம் புது நடிகர்களின் சிறிய பட்ஜட் படங்கள் வரை ஏறத்தாழ 160 ற்கு மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

இதில் சில திரைப்படங்கள் மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளதுடன், சில திரைப்படங்கள் முதலுக்கு மோசம் செய்யாமல் தப்பித்ததுடன் சில திரைப்படங்கள் பெரும் தோல்வியையும் சந்தித்துள்ளன.

இந்தியா தமிழ் நெட் கலக்ஸன் படி டாப் 10 தமிழ் திரைப்படங்களின் பட்டியல் இதோ…

#1 பிகில்

அட்லியின் இயக்கத்தில் கல்பதி எஸ். அகோரம் அவர்களால் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய் முக்கிய இரட்டை வேடங்களில் தந்தை மற்றும் மகனாக நயன்தாரா மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒக்டோபர் 25 ம் திகதி திரைக்கு வந்த இத்திரைப்படம் தான் இந்தியா தமிழ் நெட் கலக்ஸனில் முதலிடத்தில் உள்ளது.

Super hit movie

#2 விஸ்வாசம்

இத் திரைப்படம் சிவா எழுதி இயக்கத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் ஜனவரி 10 திரையிடப்பட்டது.  டி.இமான் அவர்களினால் இசையமைக்கப்பட்ட இப்படத்தின் பாடல்களும் படத்தை போலவெ பெரும் ஹிட் ஆகின..

Block buster movie

#3 பேட்ட

கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கிய சன் பிக்சர்ஸ் கலாநிதி மாரன் தயாரிப்பில் அனிரூத்தின் இசையமைப்பில் 2019 ஜனவரி 10   வெளியான திரைப்படம் தான் இது. இத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ,விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திகி, பாபி சிம்ஹா, சனந்த், மேகா ஆகாஷ், மற்றும் மாலவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Hit Movie

#4 நேர் கொண்ட பார்வை

எச். வினோத் எழுதி இயக்கிய போனி கபூர் தயாரித்து ஆகஸ்ட் 8 வெளியான இந்த படம் இந்தி திரைப்படமான பிங்க்  இன் ரீமேக் ஆகும். இதில் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம் மற்றும் ஆண்ட்ரியா தாரியாங் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் அவர்களோடு அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ், ரங்கராஜ் பாண்டே, சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Super Hit Movie

#5 காஞ்சனா 3

ராகவா லாரன்ஸ் இணைந்து தயாரித்து இயக்கிய அதிரடி, நகைச்சுவை, திகில் படமே காஞ்சனா 3. காஞ்சனா 1, 2 ஐ தொடர்ந்து வெளியான இத் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி, கோவை சரலா, சூரி, தருண் அரோரா, மற்றும் கபீர் டுஹான் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் ஏப்ரல் 19 வெளியானது.

Block buster movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

ஷாருக்கானின் மகளா இது??? இணையத்தில் கலக்கும் கிளாமர் போட்டோஸ்

'தளபதி 64' படத்தின் பெயர்​… வேற​ லெவல் பா…