in

மற்றொரு அழகியின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு அழகி. MISS WORLD 2019

ஒவ்வொரு வருடமும் உலகலாவிய ரீதியில் ‘ உலக அழகிப் போட்டி’ நடைபெற்று வருகின்றது.

மிஸ் வேர்ல்ட் போட்டியின் 69 வது பதிப்பான மிஸ் வேர்ல்ட் 2019, டிசம்பர் 14, 2019 அன்று ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் உள்ள எக்ஸ்செல் லண்டனில் நடைபெற்றது. இதில் ஜமைக்காவைச் சேர்ந்த டோனி-ஆன் சிங் உலக அழகியாக முடிசூடினார்.

மிஸ் வேர்ல்ட் 2019 யின் இறுதி முடிவை அறிவித்த தருணத்தில் இடம்பெற்ற ஓர் நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெற்றியாளர் அறிவிக்கப்பட்டபோது,  மிஸ் நைஜீரியா நைகாச்சி டக்ளஸ்,  மிஸ் ஜமைக்கா டோனி-ஆன் சிங்கின் வெற்றிக்காக,  மகிழ்ச்சியாக குதித்து, அந்த இடத்திலேயே ஓடி, சக போட்டியாளர்களிடையே உற்சாகமாக காட்சியளித்ததோடு டோனி-ஆன் சிங்கை கட்டிப்பிடித்து நடனமும் ஆடினார்.

இந் நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஒரு ரசிகர் கூறுகையில் “மிஸ் நைஜீரியாவின் ரியாக்சன் என்னை புல்லரிக்கச் செய்தது.. மற்றொரு பெண்ணின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு பெண் – WOW……… WHAT A QUEEN…..!” என தெரிவித்துள்ளார்.

உண்மையில் மிஸ் நைஜீரியாவும் மனதால் ஓர் மிஸ் வேல்ட் தான்.

உண்மையில் மிஸ் நைஜீரியாவும் மனதால் ஓர் மிஸ் வேல்ட் தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

நீண்ட கருகரு கூந்தலுக்கு 10 அற்புத உணவுகள்

தமிழ் சினிமாவில் இசை வாரிசுக்களைப் பெற்ற 10 இசை ஜாம்பவான்கள்