in

மியா காலிஃபாவை சவுதிக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கும்படி இணையத்தில் கோரிக்கை

2016 ஆண்டு, மியா காலிஃபாவை சவுதி அரேபியாவிற்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் இணையத்தள கோரிக்கை மூலம் கோரப்பட்டது. 2015 ஜனவரி மாதம் டைம்ஃபிளைஸ் எனும் இசைக்குழு மியா காலிஃபா எனும் பெயரில் இசைத்தொகுப்பு ஒன்றினை வெளியிட்டது.

யார் இந்த மியா காலிஃபா

இவர் லெபனான் நாட்டின் பெய்ருட் நகரில் பிறந்தவர். 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. இவர் கத்தோலிக்க மதத்தினரக இருந்தாலும் அதைப் பின்பற்றாதவராக வாழ்ந்தார். டெக்சாசு பல்கலைக்கழகத்தில் (University of Texas) வரலாற்றில் இளநிலைப் பட்டம் பெற்றார். தனது 18 வது வயதில் 2011 பிப்ரவரி மாதம் அமெரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார்.

2014, அக்டோபர் மாதம் முதல் தொழில்முறை ஆபாசப்பாலியல் காணொளிகளில் தோன்றத் தொடங்கினார்.அவரது 22 வது வயதுவாக்கில் அவரது காணொளிகள் 15 இலட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்படது. பாலியல் ஆபாசக் காணொளி இணையத்தளங்களில் மிக அதிக அளாவில் தேடப்பட்ட நபராக இவர் விளங்கினார்.

புளோரிடா மாநிலத்தின் மியாமி பகுதியில் வசித்த மியா காலிஃபா, தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கைக்குப் பின்னர் டெக்சாஸ் மாகாணத்தில் குடியேறினார்.

தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கைக்குப் பின்னர் அவரது டிவிட்டர் கணக்கினை 10 இலட்சம் மக்கள் பின் தொடர்கின்றனர், மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை மூன்று இலட்சம் மக்கள் பின் தொடருகின்றனர்.

தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததால் அவரது பெற்றோர் அவருடன் பேசுவதில்லை என நேர்காணலில் கூறியிருந்தார். தொழில்முறை ஆபாசப்பாலியல் வாழ்க்கையினை இவர் தேர்ந்தெடுக்கக் காரணம் இவர் வளார்ந்த நாட்டின் கலாச்சாரம் எனத் தெரிவித்தனர். மேலும் இவர் அத்துறையினைவிட்டு விலகிவிட வேண்டும் எனவும் அதனால் எந்தவித குடும்பத்திற்கோ, நாட்டிற்கோ கெளரவமும் கிட்டப்போவதில்லை எனவும் அவரது பெற்றோர் தெரிவித்ததாகவும் கூறினார். 2016 ஆம் ஆண்டில் நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆபாசப்பாலியல் தொழிலில் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்ததாகவும், பின்னர் அதிலிருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் தற்போது மியா காலிஃபாவும் கில்பட் ஆர்னஸும் இணைந்து காம்ப்ளக்ஸ் நியூஸ் (Complex News’s) எனும் யூடியூப் பக்கத்தில் விளையாட்டு நிகழ்ச்சியை தினமும் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

விவாகரத்துக்குப் பின்னரான DD யின் டாப் 10 புகைப்படங்கள்

2018 ஆம் ஆண்டு மிக மோசமான திரைப்படங்கள் என பதிவான 10 திரைப்படங்