in

திரையிடப்பட்டு சில மணி நேரத்திலேயே இணையத்தில் வெளியான " ஹீரோ

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் படம் தான் ஹீரோ. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை 2019-12-20 வெற்றிகராமாக இந்தியாவில் மட்டுமன்றி பல நாடுகளிலும் திரையரங்குகளில் கோலாகலமாக திரையிடப்பட்டது.

சிவகார்திகேயன் போன்ற சூப்பர் ஹீரோவைக் கொண்டு படம் தயாரிக்கப்பட்டமையால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், சண்டைக் காட்சிகள், பாடல்கள் என அனைத்திலும் அதிகளவு பணம் செலவு செய்யப்பட்டு இருந்தது.

கல்வியை வியாபாரமாக எப்படி மாற்றுகின்றனர், கல்வி கற்றவர்களை வைத்து எப்படி கல்வி அரசியல் செய்கின்றனர் இதனை சூப்பர் ஹீரோ எவ்வாறு தட்டிக் கேட்கிறார் என்பதை அடிப்படையாக கொண்ட கதைக் களத்தில் அனைவரினதும் ஆதரவை பெறக் கூடிய படமாகவே இத் திரைப்படம் காணப்பட்டது. 

மாபெறும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்த்திருந்த படக்குழுவினருக்கு படம் ரிலீஸான கொஞ்ச நேரத்திலேயே பெறும் அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ்ராக்கர்ஸ், குட்டி மூவிஸ், தமிழ் யோகி என பல ஆன்லைன் தளங்களில் ஹீரோ திரைப்படம் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு வீட்டில் இருந்தே படம் பார்க்க வசதி கிடைத்தது.

ஆனால் இதையும் தாண்டி ஹீரோ கலெக்‌ஷனில் சாதணை படைக்கும் என திரையுலகில் ஓர் பேச்சு..

புத்தக படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை என்று சொல்லி புரிய வைக்கும் இந்த ஹீரோ நிறைய குட்டி பசங்களுக்கு சூப்பர் ஹீரோ தான்.

காத்திருந்து பார்ப்போம்………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

தமிழ் சினிமாவில் இசை வாரிசுக்களைப் பெற்ற 10 இசை ஜாம்பவான்கள்

விவாகரத்துக்குப் பின்னரான DD யின் டாப் 10 புகைப்படங்கள்