in

தமிழ் சினிமாவில் இசை வாரிசுக்களைப் பெற்ற 10 இசை ஜாம்பவான்கள்

தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் இசை துறையில் கால் பதித்து வெற்றிகரமாக சாதித்து வருகின்றனர். அவர்கள் சிலரின் வாரிசுகள் தங்களின் தாய்/தந்தைக்கு பெருமை சேர்ப்பவர்களாக இசைத் துறையில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

யார் கண்டார்கள்??? 

எதிர்காலத்தில் தன் தாய்/தந்தையரை மிஞ்சி விடுவார்களோ என்னவோ???

#1 உன்னி கிருஷ்ணன் – உத்ரா உன்னி கிருஷ்ணன்

கர்நாடக கிளாசிக்கல் பாடகர் பி.உன்னி கிருஷ்ணனின் மகளான உத்ரா உன்னி கிருஷ்ணன் தனது 7 வயதில் சைவம் படத்தில் 'அழகே' பாடலை பாடியதன் மூலம் பாடகியாக அறிமுகமானார். மேலும் இப் பாடலுக்காக 2015 ஆம் ஆண்டில், 62 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

#2 ஏ.ஆர் ரகுமான் – ஆர். அமீன்

இசையமைப்பாளரும் பாடகருமான ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் அவரது தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஓ காதல் கன்மணி படத்தில் பாடல் ஒன்றை பாடியதன் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கினார், அதன் பின் தற்போது பல இந்திய மொழிகளில் பாடல்கள் பாடிவருகின்றார்.

#3 சிவகார்த்திகேயன் – ஆராதனா சிவகார்த்திகேயன்

தனது படத்தில் மற்றும் இன்றி வேறு சில படங்களிலும் பாடல்கள் பாடியதன் மூலம் தானும் பாடகர் தான் என நிரூபித்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளான ஆராதனா சிவகார்த்திகேயனை 'கனா' படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' பாடலை பாடச் செய்து தனது மகளை மிகச் சிறிய வயதிலேயே பாடகியாக்கியுள்ளார்

#4 சுஜாதா மோகன் – சுவேதா மோகன்

பிரபல பாடகி சுஜாதா மோகனின் மகளான சுவேதா மோகன் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான  நான்கு பிலிம்பேர் விருதுகள், ஒரு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளைப் பெற்று தன் அம்மாவின் சிறந்த வாரிசு என நிருபித்துள்ளார்.

#5 தேவா – ஷ்ரீகாந்த் தேவா

தமிழ் இசை இயக்குனர் தேவாவின் மகனான ஷ்ரீகாந்த் தேவா தன் தந்தையை போலவே இசையமைப்பாளராகவும் பாடகராகவும் திரையுலகில் வலம் வருகின்ரார். இவர் 2000 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்படமான டபுள்ஸில் இசை இயக்குநராக அறிமுகமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

மற்றொரு அழகியின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு அழகி. MISS WORLD 2019

திரையிடப்பட்டு சில மணி நேரத்திலேயே இணையத்தில் வெளியான " ஹீரோ